அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணி.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் கொடியசைத்து பள்ளியிலிருந்து துவக்கி வைத்தார்.
பள்ளியில் இருந்து பேரணி பேட்டை ம. தி. தா.இந்துக் கல்லூரி வழியாக செந்தமிழ் நகர் திருமங்கை நகர் பேட்டை ஐடிஐ ஆகிய பகுதிகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதுகலைப் பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி ஓவிய ஆசிரியர் சீதாராமன் உடற்கல்வி இயக்குனர் சாம் நியூட்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
