அரிசிக்கு 5சதவீதம் விதித்துள்ளது மத்திய அரசு – வரியை திருப்பி பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் அரிசி உரிமையாளர்கள் சங்கத்தினர் 1நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.

திருச்சி: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசிக்கு 5 சதவீதம் வரி விரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவானது தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும்.
தமிழக மக்களுக்கு அரசி என்பது அத்தியாவசியமான உணவு என்ற வகையில் இதற்கு 5% வரி உயர்த்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை ஏற்கனவே கடுமையாக அமல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து அரசி உற்பத்தி உரிமையாளர்களும் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் பேக் செய்யப்பட்ட அரிசிக்கு 5% உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் மூட்டைக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் விலை உயர்வு ஏற்படும் இது பொதுமக்களே சென்றடையும். இந்த 5சதவீத வரி உயர்வை மீண்டும் திரும்பபெற வலியுறுத்தி தமிழக முழுவதும் உள்ள அரசு உற்பத்தியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வரும் 16ஆம் தேதி நடத்த உள்ளனர்.
இந்திய அளவில் நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழகம் அரசு உரிமையாளரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்து நிதித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அடுத்த கவுன்சில் கூட்டத்தில் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். எனவே தற்போது தமிழக முதல்வர் இது குறித்து நாங்கள் முறையிட வாய்ப்பில்லை.
அத்தியாவசிய உணர்வு பொருள் என்கின்ற வகையில் பிரிட்டிஷ்காரர்கள் உப்புக்கு வரி வைத்தது போல தற்போது அரிசிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.இந்த விலை ஏற்றம் மக்கள் மேல்தான் சென்றடையும் என தெரிவித்தார். பேட்டியின் போது தலைவர் சக்திவேல், பொருளாளர் குபேரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
