BREAKING NEWS

அலங்காநல்லூரில் காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா.

அலங்காநல்லூரில் காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலுடன் இணைந்த காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

ஆண்டுதோறும் இந்த காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னரே உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

 

 

இரண்டு நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் கரகம் ஜோடித்தல், மாவிளக்கு எடுத்தல், பக்தர்களுக்கு கூல் காய்ச்சி வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலையில் பக்தர்கள் தீ சட்டி எடுத்தல், வேல் குத்துதல், கரும்பு தொட்டில் கட்டுதல், உள்ளிட்ட நேர்த்திகடனை செலுத்தினர்.

 

இதனை தொடர்ந்து இன்று மாலை கரகம் ஆற்றில் கரைப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

 

முன்னதாக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், நகர் செயலாளர் ரகுபதி, இளைஞரணி சந்தனக் கருப்பு மாணவரணி பிரதாப், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS