அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். அரசு பேருந்து டிரைவரான இவர் நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கல்லணை பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த பால்வண்டியிம் இவர் வந்த இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
CATEGORIES மதுரை