BREAKING NEWS

அவதூறாக பேசிய பாஜகவை சேர்ந்த இருவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவதூறாக பேசிய பாஜகவை சேர்ந்த இருவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இறைதூதர் முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் உள்ளிட்டவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய பாஜகவை சேர்ந்த இருவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 150 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )