ஆசிரியர் தம்பதியினர் கொலை வழக்கு: நகை பணத்திற்காக எதிர் வீட்டுக்காரர்களே கொலை செய்த அம்பலம்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியர் கொலை வழக்கில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர் . அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் . நகரைச் சேர்ந்த சங்கரபாண்டியன் , ஜோதிமணி கடந்த ஜுலை 18 ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலையை எதிர் வீட்டில் வசித்து வந்த சங்கர் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது . இக்கொலைக்கு அவரது மனைவி பொன்மணி உடந்தையாக இருந்துள்ளார்.
சங்கர் கடன் கேட்டதற்கு தர மறுத்த சங்கர பாண்டியனையும் அவரது மனைவியையும் கொலை செய்துவிட்டு பணம் , நகைகளை கொள்ளையடித்ததை சங்கர் ஒத்துக் கொண்டதையடுத்து கணவன் , மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர் .
CATEGORIES விருதுநகர்