ஆண்டிபட்டியில் கிராம சாவடி அமைக்க பணி துவக்கம்.
ஆண்டிபட்டியில் கிராம சாவடி அமைக்க பணி துவக்கம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முசுவனூத்து உள்ள ஊராட்சியில் என். ஆண்டிபட்டி கிராம மக்களின் நீண்ட நாளாக கிராம சாவடி அமைப்பதற்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனை ஏற்று நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தனது சட்டமன்ற நிதியிலிருந்து சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கிராம சாவடி கட்டுவதற்கான பூமி பூஜை, மற்றும் சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள மன்னவராவதி கிராமத்திற்குச் ரூபாய் 5 லட்சத்திற்கு சிமெண்ட் தலம் ஆகிய பணிகளை தொடங்குவதற்கான பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் யாகப்பன், முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன், முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ், சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரபாவதி ரவிச்சந்திரன்,அதிமுக மாவட்ட நிர்வாகி ஜேசுராஜ், அரசு ஒப்பந்ததாரர்கள் முருகன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.