BREAKING NEWS

ஆத்தூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சூரியபிரகாஷ் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

ஆத்தூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சூரியபிரகாஷ் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

சேலம் மாவட்டம்.

 

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வாலிபர் சூரிய பிரகாஷ் (23) இவர் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் வாழப்பாடியில் இருந்து ஆத்தூரை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது ஆத்தூரை நோக்கி முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென வேகத்தை குறைத்துள்ளதால் லாரியின் பின் பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சூரிய பிரகாஷ் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த காயமடைந்தார்.

 

 

மேலும் மற்றொரு இருசக்கர வாகனம் சூரிய பிரகாஷின் இருசக்கர வாகனத்தில் மோதி முதியவரும் படுகாயம் அடைந்துள்ளார்.

 

உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வாலிபர் சூரிய பிரகாஷ் உயிரிழப்பு.

 

 

இதை அறிந்த ஆத்தூர் நகர போலீசார் சூரிய பிரகாஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

வாலிபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )