ஆத்தூர்-சாலை ஓரங்களில் இருக்கும் நிழல் தரும் மரங்களை அரசின் அனுமதி இன்றி வெட்டிகுவித்துவரும் சமூக விரோதிகள்
ஆத்தூர்-சாலை ஓரங்களில் இருக்கும் நிழல் தரும் மரங்களை அரசின் அனுமதி இன்றி வெட்டிகுவித்துவரும் சமூக விரோதிகள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பஞ்சம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் பசுமையாக வளர்ந்து நிழல்குடைபோல் காட்சியளிக்கும் அரசுக்கு சொந்தமான விளைஉயர்ந்த மரங்களை சில நாட்களாக சில சமூகவிரோதிகள் மரங்களை வெட்டி லாரியில் கடத்திச்சென்று விற்பனை செய்துவருகின்றனர்.
மேலும் இது சார்ந்து நடைபயணிகள் மற்றும் பொதுமக்கள் மரம் வெட்டு பவர்களை தடுத்து கேட்டால் உறிய பதில் தர மறுத்து வருகிறார்கள்.மேலும் இத்தகைய செயல்செய்பவர்யார் ஏன் அவர்கள் மீது இன்னும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என பொதுமக்கள் சார்பில் கேள்விகள் எழுப்பி சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திண்டுக்கல்