BREAKING NEWS

ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல்மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்தியஅரசை கண்டித்துகேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்,

ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல்மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்தியஅரசை கண்டித்துகேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்,

மத்தியில் மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் மே 25 முதல் 31 ஆம் தேதி வரை வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர் இதில் மாவட்ட ஒன்றிய தாலுக்கா செயலாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )