ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 20 பவுன் நகை.. ரூ.3 லட்சத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது உடனடியாக தடை செய்ய வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த ஆண்கள் தற்கொலை செய்து கொண்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறதுது. இது உடனடியாக தடை செய்ய வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் நிறுவன ஊழியரான பவானி என்பவர் வேலைக்கு ரயிலில் செல்லும் போது ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் மற்றும் கணவர் கண்டித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி பவானி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இந்த விளையாட்டில் 20 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த தகவலை தந்தையிடம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில் நேற்று குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல் துறையினர் பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளின் தாய் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.