BREAKING NEWS

ஆம் ஆத்மி கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

ஆம் ஆத்மி கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் – கொ. விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திட்டக்குடி தொகுதி தலைவர் செந்தில் தலைமை தாங்கினார், வணிகர் அணி செயலாளர் ராமு முன்னிலை வகித்தார்.

 

சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் மருத்துவர் தேவகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் புதுக்குளம் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கௌரி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பது, புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது, மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்ற பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

இதில் நெய்வேலி தொகுதி தலைவர் ஞானராஜ், துணைத் தலைவர் பெருமாள், செயலாளர் விஜயகுமார், துணைச் செயலாளர் கிங்ஸ்டர், திட்டக்குடி தொகுதி செயலாளர் பத்மநாபன், பொருளாளர் வெங்கடேசன்,

 

மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூமாலை, பண்ருட்டி தொகுதி செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் கணேஷ்கர், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரழகன், விருதாச்சலம் தொகுதியை சேர்ந்த பிரவீன் குமார்,

 

பண்ருட்டி தொகுதி செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் மற்றும் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )