BREAKING NEWS

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி

தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்

ஆவடி மாநகரம் பருத்திப்பட்டு அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி நடைபெற்றது, நிகழ்ச்சியில் மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் ஆவடி
சின்னம்மன் கோவில் அருகே போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைக்க பேரணி மூர்த்தி நகர் பருத்திப்பட்டு அய்யன்குளம் வழியாக கல்லூரி வரை மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பாதாகைகளை கையில் ஏந்தியபடி, வாசகங்கள் சொல்லிக்கொண்டு ஐந்து கிலோ மீட்டர் வரை நடைபயணமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..

பின்பு மாணவ மாணவிகளிடம் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசுகையில்,

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களிடம் இந்த தகவல்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும்,
கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனங்கள் ஓட்டி செல்லும் பொழுது கட்டாயம் கைபேசி உபயோகப்படுத்தக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, ஏன்னா பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகளிடம் கூறினார்..

முன்னதாக பேரணியின் போது மாணவர்கள் வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜேந்திரகுமார் விஜி ராய் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்..https://youtu.be/XTiPM0oaFrI

CATEGORIES
TAGS