BREAKING NEWS

ஆவடி: திருமணமான 9 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு – ஆர்டிஓ விசாரணை

ஆவடி: திருமணமான 9 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு – ஆர்டிஓ விசாரணை

ஆவடி அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் வசிப்பவர் ஐயப்பன் (35). இவர் பிராட்வேயில் உள்ள பாத்திரக் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தரண்யா (25). உறவினர்களான இவர்களுக்கு கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐயப்பன் வேலைக்குச் சென்ற நிலையில், தனது மனைவி தரண்யாவை கைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் கைபேசியை எடுத்து பேசவில்லை. இதனையடுத்து அவர் வீட்டு உரிமையாளர் ரஞ்சித்திற்கு போன் செய்து பார்க்குமாறு கூறியுள்ளளார். அவர் வந்து பார்த்தபோது தரண்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தரண்யாவுக்கு திருமணமாகி 9 மாதங்;களே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )