BREAKING NEWS

ஆவடியில் பள்ளி மாணவன் ஒருவனை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆவடியில் பள்ளி மாணவன் ஒருவனை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோராசேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சிபிஅரசன் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இங்கு பொதுத்தேர்வு எழுத கோணம்பேடு அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 15கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பொதுத் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர்.அப்பொழுது கோணம்பேடு பள்ளியை சேர்ந்த மாணவிகளை காமராஜர் நகர் அரசினர் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத வந்த மாணவிகளை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.


இதனை அம்மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு முடித்துவிட்டு பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த சிபி அரசன் என்பவரை அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை வைத்து சிபி அரசனை முகம் தலை என கடுமையாக தாக்கிஉள்ளனர் தடுக்க வந்த சிலரையும் அந்தகும்பல் கடுமையாக தாக்கி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அந்தகாட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பகிரப்பட்டு வந்து இதில் சிபியரசன்னுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததார். இதனைதொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முதுலதவி சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர் சம்பவம்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சிபி அரசனிடம் விசாரித்தபோது தாம் யாரையும் கேலி செய்யவில்லை எனவும் மாணவர்கள் குழுவாக செல்லும் போது யாரோ ஒருவர் செய்ததற்கு நம்மை தவறாக தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )