இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது:

தஞ்சாவூர் மாவட்டம்,
பூதலூர் தாலுக்கா,கல்லணையில் ரூ.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்டத்தையும் தஞ்சாவூர் மாவட்டத்தையும் இணைக்கும் கொள்ளிடம் பாலம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் முறையாக திறக்கப்படாததால் பேருந்து வசதி இதுவரை செய்யப்படவில்லை, பாலத்தில் கனரக வாகனங்கள் இரவு நேரங்களில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு விபத்துகளும் ஏற்படுகிறது, மேலும் கல்லணையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும்,தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டுமென்றும் மற்றும் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அகரப்பேட்டை வழியாக கல்லணைக்கு அரசு பேருந்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஜீன் 09-ல் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று (08-06-2022) காலை சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் உயர்திரு.பூதலூர் வட்டாட்சியர் திருமதி.பிரேமா தலைமையில் நடைப்பெற்றது.மேற்படி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் இரா.இராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.முகில்,ஒன்றிய துணை செயலாளர் ஆர்.சதீஸ்குமார்,ஒன்றிய பொருளாளர் எஸ்.கார்த்திக்,ஒன்றிய கவுன்சிலர் திருமதி.சு.லதா சுப்பிரமணியன்,நிர்வாகிகள் எம்.சம்சுதீன்,இப்ராஹிம்,வீ.ராமமூர்த்தி மற்றும் துறை ரீதியாக போக்குவரத்துதுறை கிளை மேலாளர் திரு.S.திருஞானம்,மின்சாரத்துறை திருக்காட்டுப்பள்ளி துணை பொறியாளர் திரு. ஆ.செந்தில்,இளநிலை பொறியாளர் திருமதி.மு.செல்வராணி,பூதலூர் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்,தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய உதவி பொறியாளர் பூ.தயாளசாமி,தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆர்.அய்யாப்பிள்ளை,அகரப்பேட்டை சரக வருவாய் ஆய்வாளர்,கோவிலடி கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஏற்கனவே திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அகரப்பேட்டை வழியாக கல்லணைக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து நாளை முதல் இயக்கப்படும் என்றும்,இதே வழித்தடத்தில் செங்கிப்பட்டியில் இருந்து புதிய நகர பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும், திருச்சி-சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை வழியாக புதிய பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்லணையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (OHT)அமைத்து கொடுத்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்கும்,புதிய கழிவறை கட்டி கொடுப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
கல்லணையில் புதிய மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் முறையாக பாலத்தை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள குறைகளை உடனடியாக சரி செய்து கொடுக்குமாறு நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கல்லணைக்கு தற்போது மின்சாரம் வரும் மின் வழித்தடத்தில் உள்ள இடர்பாடுகளான மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறைக்கு முறையான கடிதம் வைத்து அனுமதி பெற்று இடர்பாடுகளை களைந்து தட்டுப்பாடற்ற மின்சாரம் தொடர்ந்து வழங்குவதோடு, புதிய வழித்தடத்தில் மின்சாரம் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு மின்சாரத்துறையினர் ஒப்புதல் அளித்தனர். கல்லணை புதிய பாலத்தில் மின்விளக்கு வசதி கொடுக்கப்பட்டிருந்தும் பராமரிப்பு இதுவரை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படை செய்யப்படாததால் மின் விளக்குகள் எரியபடாமல் இருந்தது.இக்கூட்டத்தின் மூலம் உரிய அனுமதி பெற்று விளக்குகள் எரிவதற்க்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். புதிய பாலத்தில் இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு பாலத்தில் கனரக வாகனங்கள் ஏதும் நிறுத்தி வைக்கப்படாமல் தடுத்து,எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறையினரால் உறுதி அளிக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் நாளை கல்லணையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
