இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!
இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!
உலகம் முழுவதும் மொபைல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் தகவல் பரிமாற்றத்திற்கான பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஆப் வாட்ஸ் அப் தான். பயன்படுத்த எளிதாகவும், ஏகோபித்த வாடிக்கையாளர்களின் ஆதரவுகளோடும் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் வசதிகளை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது வாட்ஸ் அப் அப்டேட் செய்து வருகிறது. தற்போது சில ஆப்பிள் ஐபோன் மொபைல்களுக்கு அளித்து வரும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த செயல்பாடுத இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வாட்ஸ்அப் பீட்டா வெளியிட்டுள்ளது.அதாவது iOS 11 இயங்குதளம் மற்றும் அதற்கு கீழுள்ள மேம்படுத்தப்படாத இயங்குதளங்களை கொண்டு இயங்கும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் அக்டோபர் 24 ஆம் தேதி, இதன் காலக்கெடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு, இந்த இயங்குதளங்கள் இருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. குறிப்பாக 2012ல் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்றளவும் பெருவாரியான பயனர்கள் உபயோகித்து வருகின்றனர் .பழைய இயங்குதளங்களில் இவை செயல்படுத்த முடியாது அல்லது பழைய பதிப்புகளுக்கு ஈடாக புதிய கால தொழில்நுட்பங்களை நிறுவ முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.