இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பனந்தாளில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பயிர் காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வலியுறுத்தியும், நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பனந்தாள் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொளஞ்சிநாதன் தலைமை வைத்தார். ஒன்றிய தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் செந்தில்குமார், சிஐடியு துணைத் தலைவர் ஜீவபாரதி, கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் காசிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS சிஐடியுதஞ்சை விவசாயிகள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பனந்தாள்விவசாயிகளு இழப்பீடு வழங்க ஆர்ப்பாட்டம்