இருபத்தி நான்கு வைணவ தலங்களில் இருந்து எழுந்தருளிய பெருமாள்கள். ராஜ வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பு. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 24 வைணவத் தலங்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி கருட சேவை வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாத கருட சேவை இந்த ஆண்டு வெகு விமர்சியாக இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள நரசிங்க பெருமாள்,
நீலமேகப்பெருமாள், மணிகுன்ற பெருமாள் ஆகிய திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் எழுந்தருள, தஞ்சையை சுற்றியுள்ள கல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீ யாதவ கண்ணன், ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 24 பெருமாள் கோவில்களிலிருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு ராஜ் வீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி,வடக்குவீதி ஆகிய சுவாமிகள் வலம் வந்து சேவை அருள்பாலித்தனர். இந்த கருட சேவையில் பஜனை பாடல்களை பாடியும், ஆடியும் பக்தர்கள் சென்றனர்.
இந்த பெருமாள் கருட சேவையில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர்.
