இளம்பெண்ணை கேலி செய்ததால் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை.
திருச்செந்தூரில் இளம்பெண்களை கேலி செய்ததால் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் வீரராகவபுரத்தினை சேர்ந்தவர் நம்பி மற்றும் உச்சி மாகாளி தம்பதியினர். உச்சி மகாளியின் தம்பி மணிகண்டன் அடிக்கடி தனது அக்கா வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், தனது அக்கா மகன் முத்துவின் நண்பனான திருநெல்வேலி மேலபாலயத்தை சேர்ந்த கேக் மகன் கண்ணன் (32) எலக்ட்ரிசினாக வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கண்ணன் அடிக்கடி நண்பன் முத்துவை பார்ப்பதற்காக வீரராகவபுரம் தெருவிற்கு வந்துள்ளார். அப்போது அதே தெருவைச் சார்ந்த கூலி வேலை செய்து வரும் சுடலை மணி மகன் ராஜ் (40) என்பவரும் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார் முத்துவின் நண்பரான கண்ணன், ராஜின் மகள்களை அடிக்கடி கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது . இதனை அறிந்த ராஜ் கண்ணனை தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவர் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக ராஜ் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் கண்ணன் மீது புகார் அளித்துள்ளார். எனவே போலீசார் கண்ணன் ராஜ் இருவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரும்படி கூறியுள்ளனர்.இந்நிலையில் மணிகண்டனின் சகோதரியின் மகளுக்கு மொட்டை போடும் விழாவிற்காக கண்ணன் மணிகண்டனால் அழைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவ்விழாவிற்காக கண்ணன் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் என்ற விக்கி ஆகிய இருவரும் வந்துள்ளனர். தெரு முனையில் நின்ற இவ்விருவரையும் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். வரும் வழியில் வீரராகவபுரம்அருகே ராஜின் மனைவி மற்றும் மகள் இருவரும் நின்றுள்ளனர். கண்ணனை பார்த்த ராஜின் மனைவி என் மகளைக் ஏன் கிண்டல் செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் கண்ணனுக்கும் ராஜின் மனைவிக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் , மணிகண்டனுடன் வீட்டிற்கு வந்த கண்ணன் தன் நண்பர்களான விக்கி, காசி ,முத்து ஆகியோரோடு பேசி கொண்டிருக்கும் போது, அங்கு அரிவாளோடு வந்த ராஜ் மற்றும் அவரது மைத்துனர் ராஜ வடிவேல் இருவரும் கண்ணனை சராமாரியாக வெட்டி கொலை செய்தனர் இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானர் இதுகுறித்து கோவில் காவல் துறையினர் கொலைசெய்த ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.