இளைஞர்களை ஏமாற்றும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும். கும்பகோணத்தில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையினால் இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் கும்பகோணம் வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் நகர செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ஆம்பல் ஏசு ராஜா மாவட்ட பொருளாளர் ராமன் குடந்தை ஒன்றிய தலைவர் தமிழ்இனியன்
திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.பாரதி கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
CATEGORIES தஞ்சாவூர்