இளையான்குடி ஒன்றியம், சாத்தனூர் சாலைகிராமம், பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா.!

செய்தியாளர் வி. ராஜா.
தமிழக அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்றான மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டி இளையான்குடி ஒன்றியம், சாத்தனூர் கிராமத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் இலவச மிதிவண்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இளையான்குடி ஒன்றியம், சாலைகிராமம் கிராமத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் இலவச மிதிவண்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் , ஒன்றிய கழகச் செயலாளர் திரு.செல்வராஜ் , ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தமிழ்மாறன்.,
ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களும், கழக முன்னோடிகளும், ஆசிரியர் பெருமக்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை