ஈரோடு – கோபிசெட்டிபாளையம் சாலையில் சுங்கசாவடி அமைப்பதை ரத்து செய்யகோரி சுங்கசாவடி எதிர்ப்பு கூட்டியக்கம் வலியுறுத்தல்.
ஈரோடு – கோபிசெட்டிபாளையம் சாலையில் சுங்கசாவடி அமைப்பதை ரத்து செய்யகோரி சுங்கசாவடி எதிர்ப்பு கூட்டியக்கம் வலியுறுத்தல்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வரை மாநில நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாலப்பாளையம் பகுதியில் சுங்கசாவடி அமைக்க உள்ளதை அறிந்த பொதுமக்கள் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு – கோபி சாலையில் அதிகளவில் விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை எடுத்து செல்லும் சாலை என்பதால் சுங்கசாவடி அமைந்தால் விவசாயிகள் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பொதுமக்கள் விவசாயிகள் அரசியல் கட்சியினர் விவசாய சங்கங்கள் ஒன்றினைந்து சுங்கசாவடி எதிர்ப்பு கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி சுங்கசாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரையில் சுங்கசாவடி எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் ஈசன்முருகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, தமுமுக, எஸ்டிபிஐ, உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் விவசாய அமைப்புகள் உள்ளிட்டோர் பங்கேற்று சுங்கசாவடி அமைப்பதை ரத்து செய்ய வேண்டியதற்க்கான அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் அறவழியில் போராட்டங்களை நடத்துவது குறித்து கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.