ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஸ்ரீ வாசவி மஹாலில் வாசவி கிளப் ஈரோடு, தமிழ்நாடு ஆரிய வைத்திய மகா சபை பவானி மற்றும் கே எம் சி ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுநல மருத்துவம் பொது அறிவை சிகிச்சை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மருத்துவம் கண் மருத்துவம் காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் வாசவி கிளப் ஈரோடு தலைவர் சங்கர் கிருஷ்ணன் ஸ்ரீ வாசவி நற்பணி மன்றம் தலைவர் ஆர். பாஸ்கரன், ஆரிய வைத்திய மகா சபை தலைவர் எல். பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பவானி சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
