ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் இரண்டு நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்று வருகிறது .

தமிழகத்தில் நான்கு மண்டலங்களில் நடைபெறும் மண்டல அளவிலான கையுந்து பந்துபோட்டியில் மாவட்ட அணிகளுக்கிடையே லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும் கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டிக்காக அரியலூர், நாகர்கோயில், வேலூர், ஈரோடு பகுதியில் மண்டல அளவிலான அணிகள் கலந்து கொள்ளும் போட்டியில் இன்று மேற்கு மண்டல அணிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தமிழ்நாடு கையுந்து பந்து மாநில செயலாளர் மார்டின் சுதாகர், குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை அறிமுகபடுத்தி போட்டியை தொடங்கி வைத்தார்.
ஈரோடுமாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இப்போட்டி தேர்வில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்களை தமிழக அணிக்கு தேர்வு செய்வதாக தமிழ்நாடு கையுந்து பந்து கழக மாநில செயலாளர் மார்டின் சுதாகர் தெரிவித்தார்.
