ஈரோடுமாவட்டம் பவானியில் ஈரோடு வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் துரைராஜா தலைமையில் கொடியேற்று விழா மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

ஈரோடுமாவட்டம் பவானியில் ஈரோடு வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் துரைராஜா தலைமையில் கொடியேற்று விழா மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி கலந்து கொண்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

பின்னர் பவானி பழைய பஸ் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகன பேரணியாக சென்று பவானி நகரம் மற்றும் அம்மாபேட்டை கிராமப் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இப் பேரணியின் வாயிலாக விவசாயிகளின் கோரிக்கைகளான பால், கரும்பு, மஞ்சள், நெல், கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்.

கால்நடை தீவனங்கள் மற்றும் உர விலையேற்றத்தை தடுக்க மானியங்கள் அளிக்க வேண்டும். பவானி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து ஏரி குளங்களை தூர்வாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பவானி சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி அமைத்து தர வேண்டும்.
அம்மாபேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ள அனைத்து தார் சாலைகளையும் புதுப்பித்து தர வேண்டும். பவானி சட்டமன்ற தொகுதியில் அதிநவீன கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீகுமார், மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
