உடுமலை பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் புதர்களை அகற்ற கோரிக்கை.

உடுமலை பழனி ரோட்டில் பிஎஸ்என்எல் குடியிருப்பு உள்ளது இந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது.

மேலும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு நடக்கவே மிகவும் சிரமப்படுகின்றனர். குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தியும் குப்பைகளை வெளியேற்றியும் இந்தப் பகுதியை சீரமைக்க கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
