உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அஇஅதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் அரசைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கு இணங்க அதிமுக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் நடைபெற்றது.

உடுமலை கே ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம் எஸ் எம் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர செயலாளர் ஏ அக்கீம் ஒன்றிய செயலாளர்கள் பிரனேஸ் ,அன்புராஜ், முருகேஷ்,பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் இளஞ்செழியன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் நடராஜ் ஆவின் சேர்மன் வக்கீல் மனோகரன் மற்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
