உடுமலைப்பேட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் தாயார் ஹிரா பென் அதிகாலையில் காலமானார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உடுமலைப்பேட்டை நகர மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது ஆத்மர சாந்தியடைய மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் கண்ணாயிரம் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலசெயற்குழு உறுப்பினர் யு.கே.பி. ஜோதீஸ்வரி கந்தசாமி. பொதுச் செயலாளர் கள் மாவட்ட செயலாளர்கள். மாவட்ட விளையாட்டுத்துறை தலைவர் ஜெயராஜ், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் அருணாசல்பாலகுரு,
மத்திய அரசு நலத்திட்ட மாவட்டசெயலாளர் காமராஜ் ,நகர துணைத்தலைவர்கள். பொருளாளர்கள். பிரச்சார அணியினர். மாவட்ட வழக்கறிஞர் அன்பு, மணிமேகலை மாவட்டபொறுப்பாளர்கள், சார்பு அணியினர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.