உடுமலைப்பேட்டை யில் பாஜக சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பாக நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் விவேகானந்தரின்
160 வது பிறந்த நாள் இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது.
மேலும் அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகர பொது செயலாளர் சீனிவாசன் , தம்பிதுரை, ஐய்யப்ப சாமி மகளிர் அணி தலைவர் ராதிகா ராஜேஸ்வரி, மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், உடுமலை தொகுதி பூத் பொறுப்பாளர் விசுவநாதன், மருத்துவ அணி மாவட்ட தலைவர் விஜய கண்ணா,
மாவட்ட செயலாளர் கலா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பாலகுரு, நகர இளைஞரணி செயலாளர் தினேஷ் குமார், சிந்தனையாளர் அணி எஸ்.கே. சுப்பிரமணியம், பட்டியல் அணி பழனிச்சாமி, உடுமலை நகர துணைத் தலைவர் உமா குப்புசாமி, 29 ஆவது வார்டு ஹரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS இளைஞர் தினம்உடுமலைப்பேட்டைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்பாஜகவிவேகானந்தர் 160 வது பிறந்த நாள் விழா