உடுமலையில் தமமுகவின் 184வது அவசர ஊர்தி அர்ப்பணிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை நகர பகுதிக்கு முகமது அப்சர் நினைவு அரங்கத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைக்கும் நிகழ்வு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ,உடுமலை நகராட்சி 13-வது வார்டு உறுப்பினரான அப்துல் கய்யூம் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் , மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரான அப்துல் சமது, நன்கொடையாளர் சந்தானலட்சுமி கார்த்தியேன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரை யாற்றினர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஜிபூர் ரகுமான் ,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் காதர் அலி , உடுமலை நகரமன்ற தலைவர் மத்தின், மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பல்வேறு கிளைகளில் இருந்து ஆம்புலன்ஸ்க்கு தேவையான உபகரணங்கள் வழங்கினர். உடுமலைபேட்டை பொதுமக்கள் பயன்படும் வகையில் இலவசமாக செயல்பட அவசர ஊர்தியை வழங்கும் நிகழ்வை தமுமுகவினர் ஏற்பாடு செய்தனர்.
