BREAKING NEWS

உர விலை உயர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த 150க்கு மேற்பட்ட விவசாயிகள் ரயிலில் புறப்பட்டனர்.

உர விலை உயர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த 150க்கு மேற்பட்ட விவசாயிகள் ரயிலில் புறப்பட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக இன்று திருச்சியில் இருந்து காலை பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னை புறப்பாடு சென்றனர்.

போராட்டத்தில்1.50 கிலோ பொட்டாஷ் ரூ.950/-க்கு விற்றதை ரூ.1700/-க்கு மத்திய அரசு விற்கிறது.
50கிலோ நெல் ரூ.980/-க்கு விற்றது ரூ.1030/- விற்கிறது. இதில் லஞ்சமாக எடுத்து கொள்வது ரூ.100 விவசாயிகள் வாழ்வதா.? சாவதா.?

100 நாட்கள் வேலை ஆட்களை வருடத்திற்கு 7மாதத்திற்கு அரசு 100 நாள் வேலை கொடுத்து கோடை காலங்களில் பயன்படுத்திக் கொண்டு மழைகாலங்களில்
5மாதங்களுக்கு விவசாய வேலைக்கு (நடவு, களை எடுப்பு) பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )