BREAKING NEWS

உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா -மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா -மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் தேர்வாகியுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும், சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள். வானமே எல்லை! இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )