உழைப்பால் உயர்ந்த மாமனிதரை பெருமைபடுத்தி பேசிய அமைச்சர்

மானாமதுரையில் தேநீர் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் திரு. கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள புஷ்பா தேநீர் நிலையம் திறப்பு விழாவிற்கு அதன் உரிமையாளர் திரு புஷ்பராஜ் அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்
இன்று காலை மானாமதுரை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தேனீர் நிலையத்தை ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு பெரியகருப்பன் அவர்கள் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து சிறப்புரையற்றினர்.
தேநீர் நிலையத்தின் உரிமையாளர் திரு. புஷ்பராஜ் அவர்கள் தனது சொந்த முயற்சியால் உழைப்பால் உயர்ந்தவர் தனக்காக வாழாமல் மாற்றுத்திறனாளி காகவே வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட மாமனிதரை கௌரவிக்கும் விதமாக அமைச்சர் தேனீர் நிலையத்தை திறந்து வைத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது,
பின்னர் வருகை தந்த அமைச்சர் அவர்களுக்கு உரிமையாளர் திரு புஷ்பராஜ் அவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அவர்களும் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு ராஜாமணி, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, சேர்மன் லதா அண்ணாதுரை, மானாமதுரை நகராட்சி துணைத் தலைவர் சுந்தர், தொழிலதிபர் முல்லை சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி சிப்காட் காளியப்பன், கொன்னங்குளம்
ஊராட்சி செயலர் பாஸ்கரன். சுரேஷ்குமார் மற்றும் தாய் இல்லத்தின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
