BREAKING NEWS

எடப்பாடி பழனிசாமிக்கு கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வாழ்த்து.

எடப்பாடி பழனிசாமிக்கு கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வாழ்த்து.

திருப்பூர் : கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் , புரட்சித்தலைவி’அம்மா’ ஆகியோர் வகித்த அந்தப் பதவி தங்களுக்கு கிடைத்துள்ளது.அவர்களைப் போலவே தாங்களும் பன்மடங்கு புகழ்பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.

மேலும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் தங்களுக்கு என்றும் ஆதரவாகஇருக்கும் என்று அன்புடன் தெரிவித்துக்கொண்டு மீண்டும் வாழ்த்துக்களைஎனது சார்பாகவும், கொங்குநாடு முன்னேற்ற கழகம்கழகம் சார்பாகவும்தெரிவித்துக்கொள்கின்றேன்.இவ்வாறு தனது அறிக்கையில் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )