BREAKING NEWS

எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அப்பகுதி சாலையோரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு அதிமுகவினர்களால் வைக்கப்பட்ட எம் ஜி ஆர் சிலையானது கீழே விழுந்துள்ளது.

 

இதை அறிந்து, அங்கு சென்ற அதிமுக ஓபிஎஸ் அணி நகர செயலாளர் மார்க்கெட் நடராஜன், மாவட்ட செயலாளர் சுந்தரராஜன்,மாவட்ட துணை செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று, கீழே விழுந்து கிடந்த எம்ஜிஆர் சிலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நெடுஞ்சாலை துறையினரை கண்டித்தும், ஒப்பந்ததாரரை கண்டித்தும், புதிய எம் ஜி ஆர் சிலை அமைத்து தர வேண்டுமெனக் கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

 

Share this…

CATEGORIES
TAGS