BREAKING NEWS

எல்.ஐ.சி., பங்குகள் 5 சதவிகிதம் நஷ்டம்! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி., பங்குகள் 5 சதவிகிதம் நஷ்டம்! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

இன்று விற்பனைக்கு வந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகித நஷ்டத்தை சந்தித்ததால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாட்டின் மிகப்பெரியு ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்று லாபம் ஈட்ட திட்டமிட்ட மத்திய அரசு, அதுதொடர்பான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. மேலும் ஒரு பங்குக்கு ரூ. 949-க்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை கடந்த மே 6-ம் தொடங்கியது.

 

இந்தநிலையில் அந்நிறுவனத்தின் மொத்த பொது பங்குகளையும் பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டியதால் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, அரசுக்கு ரூ. 20,557 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இந்தநிலையில் இந்த பங்குகள் அனைத்தும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, இன்று விற்பனை தொடங்கியுள்ளது. இதில் பங்குகள் அனைத்தும் வாங்கிய விலையிலிருந்து
8.11 சதவீதமாக குறைவாகவே ரூ. 872-க்கு விற்பனையாகிறது.

இதேபோல் மும்பை பங்கு சந்தையில் ரூ. 867-க்கு ஒரு பங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே முதல் நாளான இன்று, பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களுக்கு 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )