BREAKING NEWS

ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழா.

ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழா.

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை மாத சப்த்தஸ்தான திருவிழா தேரோட்டம் ஆயிரகணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை மாத சப்த்தஸ்தான திருவிழா கொடி ஏற்றம் கடந்த 05 ஆம் தேதி தொடங்கியது அதை தொடர்ந்து தன்னைத்தான பூஜித்தல் நடைபெற்றது. 7 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. கடந்த இரண்டு வருட காலமாக கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக நடைப்பெறாமல் இருந்த நிலையில் இன்று ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணைகண்காணிப்பாளர் ராஜமோகன் செய்திருந்தார்.

தீயனைப்புதுறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதை தொடர்ந்து 16 ஆம் தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகiயுடன் வெட்டிவேர்; பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. மறுநாள் 17 -ம் தேதி தில்லைஸ்தானம் பல்லாக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞனசம்பந்த பரமாச்சாரியர் சுவாமிகள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )