BREAKING NEWS

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில், அறுந்த இரும்பு கயிறுகளை மாற்றும் பணி தீவிரம்.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில், அறுந்த இரும்பு கயிறுகளை மாற்றும் பணி தீவிரம்.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மதகுகளில் 2 இடங்களில் ஷட்டர் இரும்பு கயிறுகள் அறுந்து விழுந்ததையடுத்து அதனை சரி செய்யும் பணி, நேற்று முதல் தொடங்கியது .

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மொத்தள்ள 7 மதகுகளில் 1 – வது மதகு மற்றும் 5-வது மதகுகளில் ஷட்டரை தூக்கும் இரும்பு கயிறு 2 இடங்களில் அறுந்துள்ளது. அறுந்து விழுந்துள்ள இந்த இரும்பு கயிறுகளை மாற்றுவதற்காக, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதையொட்டி, அணையில் 40 அடி அளவில் இருந்த தண்ணீர், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு 24 அடியாக குறைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு பணிகளை தொடங்கினர்.

மதகுகளில் அறுந்து விழுந்த 2 ஷட்டர் இரும்பு கயிறுகளையும் மாற்றும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். மேலும், வருகிற 23 -ந் தேதிக்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )