BREAKING NEWS

ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்

ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் திரெளபதி முர்மு , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர். பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர்திரெளபதி முர்மு , இன்று புதுவைக்கு வந்தார்., எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி பேசினார். இதன்பின் அவர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரவுள்ளார்.


இந்நிலையில் திரெளபதி முர்மு வுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் தனித்தனியாக சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்துள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வருகை தந்துள்ள நிலையில் ஓபிஎஸ் இன்னும் வரவில்லை. ஒரேமேடையில் இருவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )