ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டத் திட்டமா?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓப்பன் டாக்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டத் திட்டமா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம். ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவே முடிவு எடுக்கும். அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நடைபெறும். ஓபிஎஸ், ஈபிஎஸ் எனது வீட்டுக்கு வந்தால் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிடலாம்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
