BREAKING NEWS

ஓராண்டு திட்டத்தில் 2023-2024 ஆண்டுக்கான தத்து எடுக்கும் நிகழ்வு

ஓராண்டு திட்டத்தில் 2023-2024 ஆண்டுக்கான தத்து எடுக்கும் நிகழ்வு.

பவானி ஒன்றியத்தில் பின் தங்கிய பகுதியாக உள்ள ஒரிச்சேரி ஊராட்சியை ஒன்றிய அரசின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஓராண்டு திட்டத்தில் 2023-2024 ஆண்டுக்கான தத்து எடுக்கும் நிகழ்வு ஒரிச்சேரி புதூர் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே. சுப்பராயன் MP தலைமையேற்றார். மாவட்ட ஊராட்சிகுழு தலைவர், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி வ. பூங்கோதை, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஆரம்ப சுகாதார பிரிவு மருத்துவர், நடுநிலை பள்ளி தலைமையாசிரியர், சிபிஐ வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ. மாதேஸ்வரன், பவானி நகர செயலாளர் ப.மா. பாலமுருகன், பவானி ஒன்றிய செயலாளர் கே.எம். கோபால், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். கந்தசாமி, மாவட்டகுழு உறுப்பினர்கள் கே. சந்திரசேகர், எல். சிவராமன், நகர துணை செயலாளர் எம்.ஆர். சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் குறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே. சுப்பராயன் அவர்களிடம் மனு அளித்தனர். அதனை உடனடியாக கவனித்து தீர்வு கான வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடன் அறிவுறுத்தினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )