கஞ்சா புகைப்பதற்காக குரங்கணி வனப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்த போடி வனத்துறையினர்.

வனசரக அலுவலகத்தில் ராஜாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் நூற்றுக்கணக்கான விதைகளை அப்பகுதியில் துவியதில் 40க்கும் மேற்பட்ட விதைகள் முளைத்து இருந்ததை கண்டதாகவும் அதில் 10 செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வனத்துறையினர் நன்கு வளர்ந்த 10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட கஞ்சா செடிகள் 10தை மட்டும் கைப்பற்றி மீதமுள்ள செடிகளை அழித்துவிட்டு ராஜா வைத்திருந்த கடப்பாரை கம்பி மண்வெட்டி மற்றும் 50 கிராம் கஞ்சா விதைகளை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா பயிரிட்டு கஞ்சா புகைக்க நினைத்த இளைஞரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் குரங்கணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
