BREAKING NEWS

கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி தஞ்சை கரந்தை பகுதியில் 200 க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி தஞ்சை கரந்தை பகுதியில் 200 க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இப்பகுதியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மெடிக்கல் ஷாப் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கஞ்சா ரவுடிகள் கும்பல் பெரிய வீச்சரிவாளை காட்டியும் கடைகளில் மிரட்டியும், 3 பேரை அரிவாளால் வெட்டியும் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மளிகை கடை ஆகியவற்றில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அபகரித்து இரவில் அட்டூழியத்தை ஈடுபட்டனர் இந்த பணப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் செயல்கள் அங்கு உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளை கைது செய்ய வேண்டும் கஞ்சா விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )