கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள அடரி கிராமத்தைச் சேர்ந்த கபிலன் (32) த/பெ அழகேசன் என்பவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டு மாடத்தில் வைத்துவிட்டு அவரது மனைவியுடன் விருதாச்சலம் சென்று மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த சுமார் 7% பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சிறுபாக்கம் காவல் நிலையத்தில் கபிலன் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருட்டுச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் குற்றவாளியை உடனடியாக பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் காவ்யா மேற்பார்வையில் வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன்,
உதவி ஆய்வாளர் சந்திரா, பயிற்சி உதவி ஆய்வாளர்கள் நித்யா,தெய்வநாயகம், காவலர்கள் அருண், திருசங்கு மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள நபர்களை விசாரணை செய்தும், சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் புலன் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு பெண் அந்த நேரத்தில், அந்த பகுதிகளில் பார்த்ததாக தகவல் கிடைத்தது. சந்தேக நபரை தேடி தியாகதுருகம் பாப்பான்குளம் தெருவில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு வந்த பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ஷம்ஷாத் வயது 33 க/பெ ஹாலீக்பாஷ, போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர்.
அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அடரி கிராமத்தில் பூட்டிய வீட்டின் சாவியை அருகில் இருந்ததை எடுத்து வீட்டைத் திறந்து வீட்டில் இருந்த 7.1/2, பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் திருடிய நகைகளை கைப்பற்றிய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.