BREAKING NEWS

கடலூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்.

கடலூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமளன்குளம் ஊராட்சியில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜையில் அடிக்கல் நாட்டு தொடங்கி வைத்தார்.

மேலும் அப்பகுதியில் வருவாய்த்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும் , ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் வழங்கினார் .

மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ( வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )