BREAKING NEWS

கடலூர் அருகே மின்னல் தாக்கி நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு.!

கடலூர் அருகே மின்னல்  தாக்கி நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் மின்னல் தாக்கி உயிரிழந்தது.

 

 

மின்னல் தாக்கிய அதிர்வில் அக்கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் அய்யாசாமி மற்றும் சந்யாசி மகன் அய்யாசாமி ஆகியோர் மயங்கி அவ்விடத்திலேயே விழுந்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .

 

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு முத்து மகன் அய்யாசாமி என்பவரை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )