கடலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தில் தெற்கு தெரு பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் (வயது 66) இவரது பண்ணை வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்துவதாக..,
வேப்பூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில்,
அங்கு பண்ணை வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்தி வந்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தொடர்ந்து வேப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.