BREAKING NEWS

கடல் பாசியில் அல்வா தயாரிக்கலாம் என திருநெல்வேலி காரர்களுக்கே அல்வா கொடுத்த திமுகவிற்கு மக்கள் 2026-ம் ஆண்டு நல்ல பாடம் புகட்ட வேண்டும்-பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு.

கடல் பாசியில் அல்வா தயாரிக்கலாம் என திருநெல்வேலி காரர்களுக்கே அல்வா கொடுத்த திமுகவிற்கு மக்கள் 2026-ம் ஆண்டு நல்ல பாடம் புகட்ட வேண்டும்-பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால மத்திய அரசின் ஆட்சி குறித்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி பகுதியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

2026 -ம் ஆண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை மலரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை தொண்டர்கள் செய்ய வேண்டும் எனவும், தற்போதைய திமுக அரசில் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், குறிப்பாக காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதியின் உறவினர்கள் வழக்கறிஞர்களை தேடி செல்வது வழக்கம். ஆனால் தற்போதை திமுக அரசு ஆட்சி காலத்தில் காவல் நிலையத்திற்கு சென்ற கைதிகளின் உறவினர்களின் சவப்பெட்டியை தேடிப்போக செல்ல வேண்டிய சூழ்நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சி என்பது பொய் பிரச்சாரங்கள் மூலம் அரங்கேறிய ஒன்று. உதாரணமாக திருநெல்வேலி என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது அல்வா. ஆனால், அந்த திருநெல்வேலிக்கு அல்வா கொடுத்தது திமுக.

அதாவது, கடல் பாசியில் இருந்து அல்வா தயாரிக்கலாம் என்று கூறி திருநெல்வேலி காரங்களே ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது திமுக.

இப்படி பல பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சியைப் பிடிக்கும் திமுகவிற்கு பொது மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என பேசினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )