கடையநல்லூரில் வன உயிரின சரணாலயம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலக முழுவதும் ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்று சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனத்துறையினர் சார்பில் உலக சுற்றுசூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தென்காசி மாவட்ட உதவி வன பாதுகாப்பு அதிகாரி நவாஸ்கான், கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான வனத்துறையினர் பங்கேற்று நிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நற்று வைத்தனர்.
நிகழ்ச்சியின்போது, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காய் இருந்து வரும் மரங்களை வளர்க்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
CATEGORIES தென்காசி